மும்பை - தாதர் ரயில் நிலையம். காலை 6.30 மணி. 2006 நவம்பர் மாதம்.
நம்ம கதையின் நாயகன் 2 ஏசி படுக்கை வசதி கொண்ட பெட்டியில் இருந்து பிளாட்பார்மில் உதிர்கிறான். உடமைகளை சரி பார்த்து விட்டு வெளியே செல்ல ஆயத்தமாகிறான். மெட்ரோ ரயில் பிடித்து செம்பூர் ரயில் நிலையம் சென்று விடலாம் என்று எண்ணிக் கொண்டு சில அடி தூரம் நடக்கையில், ஒரு பருமனான உருவம் குறுக்கிடுகிறது. டாக்ஸி சாஹிப் என்கிறார் அந்த பருத்த உருவக்காரர். நம்ம ஆளுக்கும் ஒரு நப்பாசை. சரி, டாக்ஸி ல தான் போவோமே என்று அவர் பின்னால் செல்கிறான்.
if ( நாயகன் டாக்ஸி ல ஏறாட்டி )
நான் இந்த ப்ளாக் எழுத வேண்டி இருந்திருக்காது!!
else
{ (தொடரவும்)
டாக்ஸி ய ஸ்டார்ட் பண்ணி சிறிது தூரம் சென்ற வுடன் டிராபிக் போலீஸ் ஒருவர் குறுக்கிட்டு வண்டி எண்ணைக் குறித்து விட்டு நம்ம ஆளு பேரயும் குறிச்சு வச்சிக்குறார். வண்டி மறுபடி ஓட ஆரம்பிச்சு கொஞ்ச நொடியில இன்னொரு ஆள் வந்து வண்டியில் ஏறிக்கிறார். சரி டாக்ஸி டிரைவர் நண்பர் ஆக இருக்கும் னுட்டு நம்ம ஆளும் கண்டுக்கல.
if ( யார் அந்த இரண்டாவது நபர் அப்படி ன்னு கேட்டு இருந்தால் )
பிரச்சினை எதுவும் இருந்து இருக்காது!!
else
{ (தொடர்க)
சற்று தூரம் சென்ற வுடன் வானொலியை ஆன் செய்து ஏதோ ஒரு ஹிந்தி எப்.எம் அலை வரிசையை தேர்வு செய்தான் அந்த டிரைவர். அப்படியே நம்ம ஆளு வாயைப் பிடுங்க ஆரம்பித்தான்! எங்க சார் வேலை பாக்கிறீங்க? என்ன வேலையா வந்தீங்க? அப்படின்னு எல்லா கேள்வி யும் கேட்டுட்டாரு! நம்ம ஆளும் எல்லாத்துக்கும் சத்யம் சொல்லிட்டாரு (சென்னை, சாப்ட்வேர் கம்பனி, 10 நாள் ட்ரிப் அப்படின்னு எல்லா உண்மையும்)
if (உண்மைய சொல்லாமல் இருந்தால்)
தப்பிக்க வாய்ப்பு இருந்து இருக்கும்!!
else
{ (அவன் தலை விதி - தொடரவும்)
பேசிக்கிட்டே செம்பூர் அருகே நெருங்கி விட்டார்கள். நம்ம ஆளு சொன்ன லாட்ஜ் க்கு கொஞ்ச தூரம் முன்னாடி ஆள் இல்லாத இடமாப் பாத்து வண்டி ய நிப்பாட்டினான்.
ஒரு சார்ட் ட எடுத்து கொடுத்தான்(டிரைவர்) நம்ம ஆளு கிட்ட. Rs.150/- க்கு வர வேண்டிய செம்பூர் க்கு Rs.350/- ன்னு அந்த சார்ட் ல போட்டு இருந்தது! நம்ம ஆளு அப்படியே ஷாக் ஆயிட்டாரு! என்ன ன்னு நியாயம் கேட்டதுக்கு அடிக்க எத்தனித்தான் அந்த டிரைவர். நிலைமை யை உணர்ந்த நம்ம ஆளு ஒரு Rs.500/- எடுத்து நீட்டுகிறான்!. அதை வாங்கிக் கொண்டு அந்த நோட்டு கிழிஞ்சு இருக்குனு சொலிட்டு இன்னொரு Rs.500/- நோட்டு கேக்கிறான் டிரைவர்.! நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த சோதா நாயகன் இன்னொரு Rs.500/- நோட்டு தருவதற்கு முன் வருகிறான். (ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில்!). தன்னை இறக்கி விடுவதா இருந்தால் பணம் தருகிறேன் என்று சொன்னான்! (அ)இறக்க குணம் கொண்ட அந்த டிரைவர் மற்றும் அவன் கூட்டாளியும் உடன் படுகிறார்கள் அந்த நிபந்தனைக்கு! Rs.1000/- கொடுத்து அவர்களிடம் இருந்து மீள்கிறான் நம் நாயகன் .... ஹி ஹி ஹி ... கேட்டாலே சிரிப்பு வருதுல்ல ... :)
}
}
}
பி.கு: இந்தக் கதையின் நாயகன் பேரச் சொல்லவே இல்லியே!!! இன்னுமா புரியல?? எல்லாம், நம்ம சொந்த சோகக் கதை தான் ... :)
Moral of the story:
Make it out on your own ....
RWH
5 years ago